/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி; யுனைடெட் கிளப் சாம்பியன்
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி; யுனைடெட் கிளப் சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி; யுனைடெட் கிளப் சாம்பியன்
மாவட்ட கூடைப்பந்து போட்டி; யுனைடெட் கிளப் சாம்பியன்
ADDED : ஆக 22, 2024 12:39 AM

கோவை : மாவட்ட அளவிலான கூடைப்பந்து ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், அன்னுார் அணியை வீழ்த்தி, யுனைடெட் கூடைப்பந்து கிளப் அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
விங்ஸ் கூடைப்பந்து கழகம், இந்தியா டேக்ஸ் பேயர் மற்றும் இ -- கிளவுட் எனர்ஜி சார்பில், 'பிரீடம் கோப்பைக்கான' மாவட்ட கூடைப்பந்து போட்டி, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில் நடந்தது.
மாணவ, மாணவியருக்கு 14, 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையிலும், ஆண்கள் ஓபன் பிரிவிலும் நடத்தப்பட்ட இப்போட்டியில், சுமார் 60 அணிகள் நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.
இறுதிப்போட்டி முடிவுகள்
ஆண்கள் ஓபன் இறுதிப்போட்டியில், யுனைடெட் கூடைப்பந்து கழக அணி, 67 - 58 என்ற புள்ளிக்கணக்கில் அன்னுார் கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தி, சாம்பியன் ஆனது. மூன்றாம் இடத்துக்கான போட்டியில், கே.பி.ஆர்., ஸ்போர்ட்ஸ் கிளப், 57 - 50 என்ற புள்ளிக்கணக்கில் சிக்ஸர்ஸ் அணியை வென்றது.
மாணவர்கள் 14 வயது பிரிவில், பெர்க்ஸ் பள்ளி அணி 77 - 27 என்ற புள்ளிக்கணக்கில், பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளியையும், 19 வயது பிரிவில் பெர்க்ஸ் பள்ளி அணி 93 - 60 என்ற புள்ளிக்கணக்கில் சபர்பன் பள்ளியையும் வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தன.
மாணவியர் 14 வயது பிரிவில், எஸ்.வி.ஜி.வி., அணி 30 - 17 என்ற புள்ளிக்கணக்கில், அல்வேர்னியா அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது.