/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கிரிக்கெட் லீக்: பி.எஸ்.ஜி., கல்லுாரி வெற்றி
/
மாவட்ட கிரிக்கெட் லீக்: பி.எஸ்.ஜி., கல்லுாரி வெற்றி
மாவட்ட கிரிக்கெட் லீக்: பி.எஸ்.ஜி., கல்லுாரி வெற்றி
மாவட்ட கிரிக்கெட் லீக்: பி.எஸ்.ஜி., கல்லுாரி வெற்றி
ADDED : மே 29, 2024 12:44 AM
கோவை;கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஆறாம் டிவிஷன் லீக் போட்டியில், பி.எஸ்.ஜி., டெக் கிரிக்கெட் கிளப் அணி, 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'சி.டி.சி.ஏ., கோப்பைக்கான' 6ம் டிவிஷன் லீக் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், பி.எஸ்.ஜி.,டெக் கிரிக்கெட் கிளப் மற்றும் கோவை புளூ நைட்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, பி.எஸ்.ஜி., டெக் அணி 45.4 ஓவர்களில் 91 ரன்களுக்கு சுருண்டது. கோவை புளூ நைட்ஸ் அணி சார்பில், ஷஷாங்க் மற்றும் சுரேஷ் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
வெற்றிக்கு 92 ரன்கள் மட்டுமே தேவை என்ற எளிய இலக்குடன், களமிறங்கிய கோவை புளூ நைட்ஸ் அணியினர், பி.எஸ்.ஜி., பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர்.
கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் பிரணவ் ஆதித்யா ஆகியோர், அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தினர். கோவை புளூ நைட்ஸ் அணி, 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியடைந்தது. சிறப்பாக பந்து வீசிய, கார்த்திக் ஸ்ரீநிவாஸ் நான்கு விக்கெட் மற்றும் பிரணவ் ஆதித்யா மூன்று விக்கெட்களை கைப்பற்றினர்.