/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கிரிக்கெட் லீக் பி.எஸ்.ஜி., வெற்றி
/
மாவட்ட கிரிக்கெட் லீக் பி.எஸ்.ஜி., வெற்றி
ADDED : மே 16, 2024 04:29 AM
கோவை : மாவட்ட அளவிலான ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் லான்பாலின் அரைசதம் கைகொடுக்க பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 'சி.டி.சி.ஏ., கோப்பைக்கான' ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்தது. இதில் பி.எஸ்.ஜி., டெக் கிரிக்கெட் கிளப் மற்றும் வெனக்ஸா கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த வெனக்ஸா அணி 42.4 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பி.எஸ்.ஜி., அணி சார்பில் பிரணவ் ஆதித்யா மூன்று விக்கெட்கள் கைப்பற்றினார்.
அடுத்து விளையாடிய பி.எஸ்.ஜி., அணிக்கு குத்து ஜேகப் லான்பால் (57*), பரணி (39) ஆகியோரின் பொறுப்பான ஆட்டம் கைகொடுக்க, 44 ஓவர்களில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து 162 ரன்கள் எடுத்து பி.எஸ்.ஜி., அணி வெற்றி பெற்றது.
இதேபோல் பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த நான்காம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் சீஹாக்ஸ் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் கோயம்புத்துார் பிரண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த சிஹாக்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து 204 ரன்கள் சேர்த்தது. நிதிஷ் குமார் (74), கணேஷ் பாபு (51) பொறுப்பாக விளையாடினர். தியாகு நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய கோயம்புத்துார் பிரண்ட்ஸ் அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. அணியின் நிதின் மணிகண்டன் (33) போராடினார். சீஹாக்ஸ் அணியின் அருண் குமார் 4 விக்கெட், கணேஷ் பாபு 3 விக்கெட் வீழ்த்தினர்.