/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட சைக்கிளிங் சங்க பயிற்சி முகாம் நிறைவு
/
மாவட்ட சைக்கிளிங் சங்க பயிற்சி முகாம் நிறைவு
ADDED : மே 21, 2024 12:48 AM
கோவை:மாவட்ட சைக்கிளிங் சங்கம் சார்பில் நடந்த இலவச சைக்கிளிங் பயிற்சி முகாம் நிறைவடைந்தது. முகாமில் பங்கேற்ற, நான்கு மாணவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி படிக்க தேர்வாகினர்.
கோவை மாவட்ட சைக்கிளிங் சங்கம் மற்றும் வெஸ்டர்ன் வேலி கிளப் சார்பில், திறமையான சைக்கிளிங் வீரர்களை கண்டறியும் நோக்கில், சிறுவர் சிறுமியருக்கு மூன்று வாரம் இலவச சைக்கிளிங் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
பயிற்சி முகாமில் பங்கேற்ற 27 மாணவர்களில் நான்கு பேர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகளில் சேர நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
பயிற்சி முகாம் நிறைவு விழா, புட்டுவிக்கி ரோட்டில் உள்ள ஜே.பி., பார்ம்ஸில் நடந்தது. இதில் மாணவ மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ், சைக்கிளிங் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

