ADDED : ஆக 01, 2024 10:18 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பொள்ளாச்சி சதுரங்க சங்கம், சங்கவி வித்யா மெட்ரிக் பள்ளி மற்றும் எழில் பல் மருத்துவமனை சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடந்தது. சங்கவி பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட, 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளித் தாளாளர் ரமேஷ்பாபு, சதுரங்க சங்க தலைவர் கருணாநிதி, செயலாளர் பரமேஸ்வரன், டாக்டர் சங்கவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி போட்டியை துவக்கி வைத்தனர். இப்போட்டியானது, 8, 10, 12, 15 மற்றும் 25 வயது பிரிவின் கீழ் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும், முதல் 15 இடங்களில் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மாநில அத்லடிக் சேர்மன் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.