/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான கிரிக்கெட் திருப்பூர் கிரிக்கெட் கிளப் வெற்றி
/
மாவட்ட அளவிலான கிரிக்கெட் திருப்பூர் கிரிக்கெட் கிளப் வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் திருப்பூர் கிரிக்கெட் கிளப் வெற்றி
மாவட்ட அளவிலான கிரிக்கெட் திருப்பூர் கிரிக்கெட் கிளப் வெற்றி
ADDED : ஜூலை 02, 2024 01:07 AM
கோவை;மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், திருப்பூர் அணியின் கேப்டன் அசத்தலாக விளையாட, அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'யூனிவர்சல் ஹீட் எக்சேஞ்ச் கோப்பைக்கான' இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, அவிநாசி சாலை சி.ஐ.டி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், ரெட் டைமண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, ரெட் டைமண்ட்ஸ் அணியின் மனோஜ் (36) சுமாராக விளையாட, மற்ற வீரர்கள் சொதப்பினர். இதனால் அந்த அணி 30.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணிக்காக ராகவன், ராஜகுகன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் கைப்பற்றினர்.
பின்னர் வெற்றிக்கு, 123 ரன்கள் தேவை என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணியின் கேப்டன், சோமசுந்தரம் (64*) அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார்.
அர்ஜூன் தன் பங்கிற்கு (31) பொறுப்பாக விளையாட 27 ஓவர்களில், இரண்டு விக்கெட் மட்டும் இழந்து, 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.