/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான வாலிபால்; என்.ஜி.என்.ஜி.,க்கு கோப்பை
/
மாவட்ட அளவிலான வாலிபால்; என்.ஜி.என்.ஜி.,க்கு கோப்பை
மாவட்ட அளவிலான வாலிபால்; என்.ஜி.என்.ஜி.,க்கு கோப்பை
மாவட்ட அளவிலான வாலிபால்; என்.ஜி.என்.ஜி.,க்கு கோப்பை
ADDED : ஆக 02, 2024 05:21 AM

கோவை : பள்ளிகளுக்கு இடையே நடந்த மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி மாணவர் பிரிவில் பொள்ளாச்சி என்.ஜி.என்.ஜி., பள்ளி அணி கோப்பையை வென்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் 'ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி கோப்பைக்கான' 4ம் ஆண்டு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி, நவ இந்தியா ராமகிருஷ்ணா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று நாக் அவுட், லீக் முறைப்படி போட்டியிட்டன.
மாணவர் பிரிவு நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி, என்.ஜி.என்.ஜி., சுகுணா ரிப், ஏ.பி.சி., அகர்வால் பள்ளிகள் லீக் சுற்றுக்கு முன்னேறின. ஒவ்வொரு அணியும் தலா மூன்று போட்டிகளில் விளையாடிய லீக் சுற்றில் என்.ஜி.என்.ஜி., பள்ளி அணி மூன்று போட்டிகளிலும் வென்று முதலிடத்தை பிடித்தது.
தொடர்ந்து அகர்வால் பள்ளி அணி இரண்டு வெற்றிகளுடன் இரண்டாமிடத்தையும், வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா பள்ளி ஒரு வெற்றியுடன் மூன்றாமிடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கம், கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பரிசுகளை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வழங்கினார். துணை முதல்வர் பூங்குழலி, உடற்கல்வி இயக்குனர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.