ADDED : ஏப் 29, 2024 11:45 PM
கோவை;மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், மாணவியர் தங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி அசத்தினர்.
கோவை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் மற்றும் முல்லை டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் மாவட்ட அணிக்காக, வீரர்களை தேர்வு செய்யும் வகையில், முதலாம் ஆண்டு மாவட்ட ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி, வடவள்ளி முல்லை நகரில் உள்ள முல்லை டேபிள் டென்னிஸ் அகாடமியில் நடந்தது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, 11, 13, 15, 17, 19 மற்றும் ஓபன் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
பெண்கள் பிரிவு முடிவுகள்
11 வயது பிரிவில், அஷ்விகா முதலிடம், சகானா இரண்டாமிடம்; 13 வயது பிரிவில் காவியாழ் முதலிடம், ஸ்ரீ சசினி இரண்டாமிடம்; 15 வயது பிரிவில் ஆருத்ரா முதலிடம், காவியாழ் இரண்டாமிடம்; 17 வயது பிரிவில், ஆருத்ரா முதலிடம், சுதேஷ்னா இரண்டாமிடம்; 19 வயது பிரிவில் ஆருத்ரா முதலிடம், சுதேஷ்னா இரண்டாமிடம்; ஓபன் பிரிவில் சுதேஷ்னா முதலிடம் சுருதி இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவியர், மாவட்ட அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை, கோவை அரசு கலைக்கல்லுாரி பேராசிரியை கார்த்திகா தேவி வழங்கினார்.
