/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட வாலிபால்; மாணவர்கள் அசத்தல்
/
மாவட்ட வாலிபால்; மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 01, 2024 01:37 AM

கோவை;பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி, சி.எம்.எஸ்., மெட்ரிக்., பள்ளியில் நடந்தது.
கணபதி, சி.எம்.எஸ்., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி சார்பில் சி.எம்.எஸ்., கோப்பைக்கான 29ம் ஆண்டு மாவட்ட அளவிலான இன்விடேஷனல் வாலிபால் போட்டி, பள்ளி வளாகத்தில் நடந்தது.
போட்டியை, சி.எம்.எஸ்., மெட்ரிக்., பள்ளி தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் ராஜகோபாலன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவர் மற்றும் மாணவியருக்கான இப்போட்டியின், மாணவர் பிரிவில் 29 அணிகள் மற்றும் மாணவியர் பிரிவில் 23 அணிகள் என, 50க்கும் மேற்பட்ட அணிகள், நாக் அவுட் மற்றும் லீக் முறைப்படி போட்டியிட்டனர்.
நாக் அவுட் சுற்று முடிவில், சிறப்பாக விளையாடியா சி.எம்.எஸ்., மெட்ரிக்., பள்ளி அணி, அகர்வால் பள்ளி அணி, வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளி மற்றும் ஏ.பி.சி., பள்ளி அணிகள் லீக் சுற்றுப்போட்டிக்கு தகுதி பெற்றன.
மாணவியர் பிரிவில், இருகூர் அரசு பள்ளி, ஏ.பி.சி., பள்ளி, சி.எம்.எஸ்., மெட்ரிக்., மற்றும் எஸ்.வி.ஜி.வி., அணிகள் லீக் சுற்றுப்போட்டிக்கு முன்னேறின.