/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.ஜே., நினைவு சர்வதேச புகைப்பட போட்டி
/
டி.ஜே., நினைவு சர்வதேச புகைப்பட போட்டி
ADDED : ஆக 01, 2024 01:17 AM

கோவை : லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் டி.ஜே., நினைவு சர்வதேச புகைப்பட போட்டி நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு போட்டியில், 6,464 படங்கள் மற்றும் உலகம் முழுவதும் 25 நாடுகளிலிருந்து ஆயிரத்து 538 பேர் பங்கேற்றனர். பரிசு தொகையாக, 10 லட்சம் ருபாய் அறிவிக்கப்பட்டிருந்தது
புகைப்பட கலையில் நிபுணத்துவம் பெற்ற, டில்லியை சேர்ந்த ராஜேஷ் பேடி, சிங்கப்பூரை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர்களான ஜெயினி மரியா மற்றும் ஜெயபிரகாஷ் போஜன் உள்ளிட்டோர் அடங்கிய நடுவர் குழு அமைக்கப்பட்டு, தேர்வு நடந்தது.
'நேச்சர்ஸ்கேப்ஸ்' தலைப்பில், மும்பையைச் சேர்ந்த திலிப் ஷாவின் முதல் பரிசையும், சென்னையை சேர்ந்த கணபதி ராம், இரண்டாம் பரிசையும் வென்றனர்.
'வைல்ட் போட்ரைட்' என்ற தலைப்பில், கேரளா காயம்குளம் பகுதியை சேர்ந்த மகேஷ் முதல் பரிசையும், கனடா நாட்டை சேர்ந்த தாமஸ் விஜயன், இரண்டாம் பரிசையும் வென்றனர்.
அவிநாசி ரோடு கஸ்துாரி சீனிவாசன் கலாசார மையத்தில் நடந்த விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு, எல்.எம்.டபிள்யு., குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் ஜெயவர்த்தன வேலு பரிசுத்தொகை வழங்கி கவுரவித்தார்.கஸ்துாரி சீனிவாசன் கலாசார மையத்தில் வரும் 4ம் தேதி வரை, புகைப்படக் கண்காட்சி நடக்கிறது.