ADDED : ஆக 27, 2024 01:25 AM
பெ.நா.பாளையம்;துடியலூரில் கோவை வடக்கு தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
வடமதுரையில் நடந்த கூட்டத்துக்கு துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.பி., நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவி பேசுகையில், கட்சியில் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டவர்களுக்கு நிர்வாகிகள், உறுப்பினர் அட்டையை அவர்கள் இருக்கும் இடங்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த தொகுதிகளை விட கூடுதல் இடத்தில் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் மணி சுந்தர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்திரசேகர், கவுன்சிலர்கள் புஷ்பமணி, கற்பகம் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.