/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு 'பளார்'
/
தி.மு.க., கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு 'பளார்'
தி.மு.க., கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு 'பளார்'
தி.மு.க., கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவருக்கு 'பளார்'
ADDED : ஆக 25, 2024 10:47 PM
தொண்டாமுத்தூர்:தி.மு.க., சார்பில், தாளியூர் பேரூராட்சி பகுதிக்கான பொது உறுப்பினர்கள் கூட்டம், கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு, தி.மு.க., நகர செயலாளரும், தாளியூர் பேரூராட்சி தலைவருமான தண்டபாணி தலைமை வகித்தார். தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், தி.மு.க., வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரும், தாளியூர் பேரூராட்சி முன்னாள் தலைவருமான புனிதனும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், கூட்டம் முடிந்து வெளியே வரும் போது, கூட்டத்தில், தண்டபாணிக்கும், புனிதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தண்டபாணி, புனிதனின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதுகுறித்து, புனிதன், தண்டபாணி மீது தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தண்டபாணியும், கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தியதாக புனிதன் மீது புகார் அளித்துள்ளார். தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.