/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய அரசு மீது பழி போடும் தி.மு.க.,; ஊட்டியில் வெளுத்து வாங்கிய விந்தியா
/
மத்திய அரசு மீது பழி போடும் தி.மு.க.,; ஊட்டியில் வெளுத்து வாங்கிய விந்தியா
மத்திய அரசு மீது பழி போடும் தி.மு.க.,; ஊட்டியில் வெளுத்து வாங்கிய விந்தியா
மத்திய அரசு மீது பழி போடும் தி.மு.க.,; ஊட்டியில் வெளுத்து வாங்கிய விந்தியா
ADDED : ஏப் 18, 2024 05:21 AM

''தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் மத்திய அரசு மீது பழி போடுவதை தி.மு.க., அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது,'' என, அ.தி.மு.க., பேச்சாளர் விந்தியா தெரிவித்தார்.
நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வனை ஆதரித்து, அ.தி.மு.க., பேச்சாளர் விந்தியா ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது பேசியதாவது:
ஆட்சி பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் தி.மு.க., மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. பொய்யான விளம்பரம், வாக்குறுதிகளை சொல்லி தி.மு.க., மக்களை ஏமாற்றி வருகிறது.அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அத்தனை நல்ல திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். கடன் மேல் கடன் வாங்கி கொண்டு தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யாமல் தங்களது குடும்பத்தை வளர்த்து வருகின்றனர்.
இந்தியாவை காக்க வந்தவர் ஸ்டாலின் என்று விளம்பரப்படுத்துகின்றனர். தமிழக மக்களை காப்பாற்ற முடியவில்லை. இவர் இந்தியாவை எப்படி காப்பாற்றுவார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறோம். மத்திய அரசு கேட்ட நிதியை தரவில்லை என்று மத்திய அரசு மீது பழி போடுவதை தி.மு.க., வாடிக்கையாக கொண்டுள்ளது.
நல்லது செய்ய வேண்டும் என்று மனசு இருந்தால் மாநில அரசே செய்யலாம். அ.தி.மு.க., ஆட்சியில், நீலகிரி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு, விந்தியா பேசினார்.

