/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவிலில் தி.மு.க., பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் புகார்
/
கோவிலில் தி.மு.க., பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் புகார்
கோவிலில் தி.மு.க., பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் புகார்
கோவிலில் தி.மு.க., பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் புகார்
ADDED : ஏப் 03, 2024 10:49 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர், டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில் பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமி, டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில் நேற்று பிரசாரத்தை துவக்கினார். கோவிலுக்கு வந்த வேட்பாளருக்கு பரிவட்டம் கட்டியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
பா.ஜ., நகர தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரிகளிடம் இதுகுறித்து மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவிலில் வளாகத்தில், தேர்தல் விதிமுறை மீறி பக்தர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி, தி.மு.க., வேட்பாளர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.மேலும், வேட்பாளருக்கு பூரண கும்ப மரியாதை, பரிவட்டம் கட்டியதும் விதிமீறலாகும்.
டி.கோட்டாம்பட்டி அமணீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், அறங்காவலர் குழு உறுப்பினர் சுபாஷினி, கிட்டசூராம்பாளையம் அமணீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரத்தினவேலு ஆகியோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் விதிமீறல் சம்பந்தமாக தேர்தல் ஆணையத்தின், சி-விஜில் மொபைல் ஆப் வாயிலாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

