/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோட்டூர் பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
கோட்டூர் பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கோட்டூர் பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
கோட்டூர் பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : ஆக 31, 2024 02:10 AM

ஆனைமலை;ஆனைமலை அருகே, கோட்டூர் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து, தி.மு.க., துணைத்தலைவருடன் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை அருகே கோட்டூர் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. அதில், துணை தலைவர் கிருஷ்ணவேணி, தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் காங்., கட்சி கவுன்சிலர்கள் நேற்று கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
கவுன்சிலர்கள் கூறியதாவது:
கோட்டூர் பேரூராட்சியில், கடந்த ஜூன் மாத கூட்டத்தில் வைக்கப்பட்ட வரவு, செலவு சீட்டில் பொதுமக்களின் வரிப்பணத்தில், பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் குறித்தும், அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளுக்கும், செலவுகளுக்கும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களை ஆலோசிக்காமல், தலைவரின் முன் அனுமதி என்ற பெயரில், பல லட்சம் ரூபாய் முறைகேடுகள் செய்துள்ளதாக தெரிகிறது.
இதைக்கண்டித்து கடந்த, 16ம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பேரூராட்சி துணை இயக்குனர் பேச்சு நடத்தி, புகாருக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
கடந்த, 27ம் தேதி வழங்கப்பட்ட மன்ற கூட்ட அழைப்பிதழில் வரவு, செலவு சீட்டில் மீண்டும் பல லட்சம் ரூபாய் ஊழல்கள் நடைபெற்றுள்ளது தெரிகிறது. அன்று, நிர்வாக காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தலைவர், செயல் அலுவலரின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், எங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததால், நேற்று நடந்த மன்ற கூட்டத்தை, 15 கவுன்சிலர்களும் புறக்கணித்துள்ளோம். கூட்டம் கோரம் இல்லாததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.