/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., மாவட்டச் செயலாளர் மயங்கினார்: கூட்டத்தில் பரபரப்பு
/
தி.மு.க., மாவட்டச் செயலாளர் மயங்கினார்: கூட்டத்தில் பரபரப்பு
தி.மு.க., மாவட்டச் செயலாளர் மயங்கினார்: கூட்டத்தில் பரபரப்பு
தி.மு.க., மாவட்டச் செயலாளர் மயங்கினார்: கூட்டத்தில் பரபரப்பு
ADDED : ஆக 29, 2024 10:31 PM
அன்னுார்: தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் மயங்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.
அன்னுார் தெற்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் கணேசபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஒன்றிய செயலாளர் தனபாலன் வரவேற்றார். நிர்வாகிகள் பேசுகையில், இலவச பட்டா, கலைஞர் வீடு, மகளிர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை ஆகியவற்றில் தி.மு.க.,வினருக்கு முன்னுரிமை தருவதில்லை. அதிகாரிகள் அலட்சியப்படுத்துகின்றனர். தி.மு.க.,வினருக்கு முன்னுரிமை தரவேண்டும்,' என்றனர்.
பதிலளித்து பேசத் துவங்கிய கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி சிலரது பெயரை வாசித்த உடனே சோர்வுடன் மயங்கி இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். சிறிது நேரம் கழித்து மீண்டும் பேச துவங்கினார். மீண்டும் சோர்வடைந்து இருக்கையில் சாய்ந்தார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்து நிர்வாகிகள் அவரை கோவில்பாளையம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டது. அதன் பிறகு கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர்அவர் நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.