/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., தேர்தல் பணிக்குழு தேர்வு
/
தி.மு.க., தேர்தல் பணிக்குழு தேர்வு
ADDED : மார் 24, 2024 11:45 PM
அன்னுார்;அன்னுாரில் தனியார் விடுதியில் தி.மு.க., வடக்கு மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க., மருத்துவரணி மாநில துணைச் செயலாளரும், அவிநாசி தொகுதி பொறுப்பாளருமான கோகுல் கிருபா சங்கர் பேசுகையில், நிர்வாகிகள் தினமும் வீடு வீடாக சென்று தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும். நீலகிரி எம்.பி., ராஜா கடந்த ஐந்தாண்டுகளில் செய்த பணிகளை தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிப்பது குறித்து மக்களுக்கு எடுத்து கூற வேண்டும், என்றார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் தனபாலன், பழனிச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து காங். கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து, அக்கட்சிகளின் நிர்வாகிகளை தேர்தல் பணிக்குழுவில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

