/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு
/
தி.மு.க., நிர்வாகிகள் சந்திப்பு
ADDED : மார் 26, 2024 10:18 PM
அன்னுார்:நீலகிரி தொகுதியில் தி.மு.க., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா போட்டியிடுகிறார். ராஜாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக, அன்னுார் வட்டார தி.மு.க., நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சந்தித்து, தி.மு.க.,வேட்பாளர் ராஜாவுக்கு ஆதரவு தரும்படி கோரினர்.
செல்லனுார், அன்னுார், கரியாம்பாளையம், கணேசபுரம், பசூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலதிபர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோரை சந்தித்து தொகுதிக்கு ராஜா கடந்த ஐந்தாண்டுகள் செய்த பணிகளை கூறி தொடர்ந்து ஆதரவு தரும்படி கோரினர்.
ஆதரவு திரட்டும் நிகழ்ச்சியில் மன்னீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், முன்னாள் அவைதலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

