/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் 15 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
/
தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் 15 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் 15 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டம் 15 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
ADDED : செப் 04, 2024 12:57 AM
மேட்டுப்பாளையம்;காரமடையில் நடந்த தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டத்தை, காரமடை நகராட்சியை சேர்ந்த 15 தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
கோவை மாவட்டம், காரமடையில் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார்.
வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, அவை தலைவர் புருஷோத்தமன், தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில், தி.மு.க.,வின் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்துவது, 2026 சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இக்கூட்டத்திற்கு முறையான அழைப்பு வரவில்லை எனக் கூறி, காரமடை நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் 15 பேர் கூட்டத்தை புறக்கணித்தனர்.
அதே போல் நகர கழக நிர்வாகிகளில் சிலரும் கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கூட்டத்திற்கு வந்த தி.மு.க., உறுப்பினர்கள், 'கட்சியில் ஒற்றுமை இல்லை என்றால், தேர்தலை எதிர்கொள்ளுவது சிரமம்' என வேதனை அடைந்தனர்.