/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர்களிடம் தி.மு.க., ஓட்டு சேகரிப்பு
/
தொழிலாளர்களிடம் தி.மு.க., ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 09, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்;பொள்ளாச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு, நேற்று காலை வேலைக்கு செல்ல காத்திருந்த கட்டுமான தொழிலாளர்களிடம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் ஓட்டு கேட்டு ஆதரவு திரட்டினார்.
பத்திரிகையாளர்களிடம் பொன்.குமார் கூறுகையில், ''பா.ஜ., பா.ம.க., கூட்டணி எலி -- பூனை கூட்டணி அமைத்ததற்கு சமம். இது திராவிட மண். இங்கு ஆர்.எஸ்.எஸ்., பருப்பு எந்த காலத்திலும் வேகாது,'' என்றார்.
மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், கவுன்சிலர் குணசேகரன், முன்னாள் குறிச்சி நகராட்சி தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

