/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்னை பார்த்து குரைப்பதா நாய்களுக்கு கத்திக்குத்து!
/
என்னை பார்த்து குரைப்பதா நாய்களுக்கு கத்திக்குத்து!
என்னை பார்த்து குரைப்பதா நாய்களுக்கு கத்திக்குத்து!
என்னை பார்த்து குரைப்பதா நாய்களுக்கு கத்திக்குத்து!
ADDED : ஏப் 28, 2024 02:06 AM
கோவை;கோவை வெங்கடாபுரம், சுப்பிரமணி வீதியை சேர்ந்தவர் சதீஷ், 21; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி கழிப்பறை அருகே, நடந்து சென்றார்.
அப்போது அங்கிருந்த நாய்கள் அவரை பார்த்து குரைத்துள்ளன. ஆத்திரம் அடைந்த சதீஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, இரண்டு தெரு நாய்களை குத்தினார்.
இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், விலங்குகள் நல ஆர்வலர் பாலகிருஷ்ணனுக்கு, தகவல் தெரிவித்தனர். நாய்களை மீட்டு சிகிச்சை அளித்த பாலகிருஷ்ணன், சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சதீஷ் மீது, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிந்து விசாரிக் கின்றனர்.