/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிற மாநில ஆம்னி பஸ்களில் பயணிக்காதீர்: கலெக்டர்
/
பிற மாநில ஆம்னி பஸ்களில் பயணிக்காதீர்: கலெக்டர்
ADDED : ஜூன் 20, 2024 04:45 AM
கோவை, : பிற மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணிக்க வேண்டாம் என்று, கோவை கலெக்டர் கிராந்திகுமார் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது அறிக்கை:
சில ஆம்னிபஸ் உரிமையாளர்கள் நாகாலாந்து உள்ளிட்ட பிற மாநிலங்களில் தவறான ஆவணங்களை சமர்ப்பித்து, ஆல் இந்தியா பர்மிட் பெற்று, தமிழகத்தினுள் முறைகேடாக இயக்குகின்றனர்.
இது தொடர்பாக, ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சு வார்த்தையில், 105 ஆம்னி பஸ்கள் மட்டுமே, தமிழகத்தில் மறு பதிவு செய்து, புது பதிவு எண்களை பெற்று விதிமுறைகளின்படி இயக்கப்படுகின்றன. மீதமுள்ள, 800 ஆம்னி பஸ்கள் எச்சரிக்கையை மீறி, தமிழகத்தில் இயங்குகின்றன என்பது தெரியவந்தது.
அதனால் பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களில் மக்கள் பயணிக்க வேண்டாம். இதில் பயணித்து விபத்து ஏற்பட்டால், பயணிகளுக்கு இழப்பீடு கிடைக்காது. பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு, அரசு பொறுப்பேற்காது.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

