/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நன்மை செய்யும் பூச்சிகள் எவை என தெரியுமா
/
நன்மை செய்யும் பூச்சிகள் எவை என தெரியுமா
ADDED : ஜூன் 09, 2024 12:30 AM

கோவை;விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் எவையெவை என்பது குறித்து, சமூக வலைதளம் வாயிலாக வேளாண் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
பயிர் பாதுகாப்பில் பூச்சிகளின் நன்மைகள் குறித்து, வேளாண் துறை தொடர்ந்து விழிப்புணர்வுஏற்படுத்தி வருகிறது.
தற்போது, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை அடையாளம் காட்டி வருகிறது வேளாண் துறை.
தேனீ, பொறி வண்டு, செங்குளவி, சில்வண்டு, புதைக்கும் வண்டு, தட்டான் பூச்சி, சிலந்தி, சிர்பிட் மலர் ஈக்கள், அமெரிக்கன் ஸ்வாலோடெய்ல், மொனார்க் பட்டாம்பூச்சி, திருட்டு ஈ, ரோவ் வண்டுகள் உட்பட 22 வகையான பூச்சிகளை படம் பெயருடன் அச்சிட்டு, நன்மை செய்யும் பூச்சிகள் என, வாட்ஸ்ஆப் வாயிலாக விவசாயிகள் மத்தியில் பகிர்ந்து வருகிறது.
சமூக வலைதளங்கள் வாயிலாக, விழிப்புணர்வு தகவல்களை வேளாண்துறை வழங்கி வருவது, விவசாயிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.