/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீழ்ச்சி வேண்டுமா... வளர்ச்சி வேண்டுமா! 21 லட்சம் வாக்காளர்கள் நாளை முடிவு செய்வார்கள்
/
வீழ்ச்சி வேண்டுமா... வளர்ச்சி வேண்டுமா! 21 லட்சம் வாக்காளர்கள் நாளை முடிவு செய்வார்கள்
வீழ்ச்சி வேண்டுமா... வளர்ச்சி வேண்டுமா! 21 லட்சம் வாக்காளர்கள் நாளை முடிவு செய்வார்கள்
வீழ்ச்சி வேண்டுமா... வளர்ச்சி வேண்டுமா! 21 லட்சம் வாக்காளர்கள் நாளை முடிவு செய்வார்கள்
ADDED : ஏப் 18, 2024 04:03 AM
கோவை : கோவை மாவட்டத்தில் நாளை (19ம் தேதி) நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு பணியில், 14 ஆயிரத்து, 772 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 124 வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களில், ஒரு லட்சத்து, 62 ஆயிரத்து, 634 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில், 1,017 இடங்களில், 3,096 ஓட்டுச்சாவடிகள் அமையும். நகர்ப்பகுதியில், 2,184, புறநகரில், 912 ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன. 225 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை.
65 சதவீத ஓட்டுச்சாவடிகளில் 'சிசி டிவி' கேமராக்கள் நிறுவி கண்காணிக்கப்படும். 132 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
8,061 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 3,751 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4,026 'விவி பேட்' இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஓட்டுப்பதிவு பணியில், 14 ஆயிரத்து, 772 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இம்முறை, 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுப்போட வசதி செய்யப்பட்டது. 2,994 பேர், 12 டி படிவம் வழங்கினர். அதில், 2,845 பேர் தபால் ஓட்டு பதிவு செய்தனர்.
தேர்தல் பணியில் ஈடுபடுவோரில், 4,302 அலுவலர்கள், 5,174 போலீசார் என, 9,476 பேர் தபால் ஓட்டுப்போட தகுதி உள்ளவர்கள். படிவம் பெற்றவர்களை தொடர்ந்து 'பாலோ' செய்கிறோம். நாளை(இன்று) மாலை வரை தபால் ஓட்டு பதிவு செய்யலாம். இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

