/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார மையங்களுக்கு டாக்டர்கள் 'ரெடி'
/
சுகாதார மையங்களுக்கு டாக்டர்கள் 'ரெடி'
ADDED : மார் 05, 2025 03:23 AM
கோவை:கோவை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக இருந்த ஏழு பணியிடங்களுக்கு, புதிய டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சி பகுதியில், 32 இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. கணபதி, ராமநாதபுரம், செல்வபுரம், துடியலுார், கல்வீரம்பாளையம், கே.கே.புதுார், ராஜவீதி ஆகிய இடங்களில் உள்ள மையங்களில், டாக்டர்கள் பணியிடம் காலியாக இருந்தது. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை மூலம், இப்பணியிடங்களுக்கு டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேர் பணியில் சேர்ந்து விட்டனர். இன்னும் மூன்று பேர் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது.
இதேபோல், மாநகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையங்களுக்கு, தேவையான டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமித்து, உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்கிற கோரிக்கை, பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.