ADDED : ஜூலை 02, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் உள்நோயாளிகள், புறநோயாளிகள் என கோவை மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து விடுகின்றன. நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை நாய்கள் கடிக்க விரட்டுவது, காண்போரிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும்.