/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறை நுாலகத்திற்கு புத்தகம் அன்பளிப்பு
/
சிறை நுாலகத்திற்கு புத்தகம் அன்பளிப்பு
ADDED : ஏப் 27, 2024 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;உலக புத்தக தினத்தை முன்னிட்டு, சிறை நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளை, நல்வழிப்படுத்தும் வகையில் கைதிகளுக்கு கல்வி, யோகா, சிறை நுாலகம், உடற்பயிற்சியுடன் கூடிய விளையாட்டுகள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.
கைதிகளின் சிந்தனையைச் சீர்படுத்தவும், அவர்களது தனிமையைப் போக்கவும், வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் உதவும் நண்பர்களாக, புத்தகங்கள் இருந்து வருகின்றன. உலக புத்தக தினத்தை முன்னிட்டு, மத்திய சிறை நுாலகத்திற்கு வழங்கப்பட்டன. இதனை சிறை எஸ்.பி., செந்தில்குமார் பெற்று கொண்டார்.

