ADDED : ஜூலை 08, 2026 09:12 PM

கோவை: சிங்கப்பெண் குழுவினர் பள்ளி, கல்லுாரிகள், பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பெண்கள், மாணவியரை நேரடியாக களத்தில் சந்தித்து குறைபாடுகளை கேட்டு அறிந்து வருகின்றனர்.
சபர்பன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சமூகவலைத்தள பயன்பாட்டில் உள்ள பின் விளைவுகள், போக்சோ சட்டம், பிற சட்ட விழிப்புணர்வு, தற்காப்பு, மொபைல் பயன்பாட்டினால் ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகள் செயல்பட வேண்டிய வழிமுறைகள், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். மாணவிகளுடன் கலந்துரையாடினர்.
‘பாலியல் தொல்லை மாதிரி எந்த பிரச்னைனாலும், பயப்படாம எங்களுக்கு போன் பண்ணுங்க; ‘போன்ல காவல் உதவி ஆப்’ டவுன்லோடு பண்ணி வச்சுக்கிட்டு கூப்பிடுங்க. பாக்கிய நாங்க பாத்துக்றோம்’ என்றார் எஸ்.ஐ.அனிதா.
434 மாணவிகள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெண் அலுவலர்கள் பங்கேற்றனர்.
