/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு 'ரிலாக்ஸ்!' பயிற்சி; வசதியுடன் ரூ.23.4 லட்சத்தில் புதுசாகுது பள்ளி

UPDATED : செப் 03, 2024 07:04 AM
ADDED : செப் 02, 2024 10:59 PM

கோவை:கோவை, காட்டூர் பகுதியில் செயல்படும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு சிறப்பு பள்ளி மற்றும் மறுவாழ்வு மையம், தனியார் நிறுவன பங்களிப்புடன், ரூ.23.4 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வகுப்பறை, டைனிங் ஹால் மற்றும் அசெம்ப்ளி ஹால் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தை கலெக்டர் கிராந்திகுமார் திறந்து வைத்தார். இங்கு, 45 குழந்தைகள் வருகின்றனர். இவர்களுக்கு யூனிபார்ம் மற்றும் பிசியோதெரபி இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இம்மையத்தை, கோவை மாவட்ட பெண் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் பராமரிக்கின்றனர்.
இதன் நிர்வாகி ஜெயப்பிரபா கூறுகையில், ''சிறப்பு குழந்தைகளை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து விட்டால், அவர்களுக்கு பயிற்சி அளித்து வழக்கமான பள்ளிகளில் சேர்க்கிறோம். இயலாத பட்சத்தில், அடிப்படை கல்வி, தொழிற்ககல்வி, சுயவேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கிறோம்.
குழந்தைகளுக்கு உணவு மற்றும் இரு வேளை ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது. பெற்றோருக்கு டெய்லரிங், எம்ப்ராய்டரி, ஓரி ஒர்க் உள்ளிட்ட பயிற்சி மற்றும் பாரம்பரிய உணவு தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வது குறித்து கற்றுத்தருகிறோம்,'' என்றார்.
'ராக்' அமைப்பின் செயலர் ரவீந்திரன் கூறுகையில், ''சிறப்பு குழந்தைகளின் வீட்டில், பெற்றோரில் யாரேனும் ஒருவர் மட்டுமே, வேலைக்குச் செல்ல முடிகிறது. இன்னொருவர், 24 மணி நேரமும் அக்குழந்தைக்காக நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது.
அத்தகைய பெற்றோர், ஒருவிதமான மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அவர்களை 'ரிலாக்ஸ்' செய்யும் வகையில், சிறப்பு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரும், இம்மையத்தில் தங்கி, சுயவேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி பெறலாம். அதற்கான சிறப்பு வசதி செய்யப்பட்டிருக்கிறது,'' என்றார்.