/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்காதீங்க! கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
/
தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்காதீங்க! கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்காதீங்க! கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்காதீங்க! கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு
ADDED : ஏப் 27, 2024 12:59 AM
கோவை;'விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது' என, புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர், கலெக்டரிடம் முறையிட்டனர்.
இதுதொடர்பாக, விவசாயிகள் கூறியதாவது:
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், ஒரு கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் கிணறு வெட்டி, அங்கிருந்து இன்னொரு பகுதிக்கு குழாய் மூலமாக, தண்ணீர் எடுத்து வர அனுமதி பெற்றிருந்தனர்.
அனுமதி கொடுத்தது தவறு என, பாசன விவசாயிகள் இணைந்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அவ்வழக்கில் விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அதில், தண்ணீர் எடுத்துச் செல்ல பதித்த குழாய்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது.
ஒரு மாதம் கழித்து மேல்முறையீடு செய்துள்ளனர். அனுமதியை புதுப்பித்து தர கடிதம் கொடுத்திருப்பதாக கூறியுள்ளனர். அதில், பேரூர் தாசில்தார் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து, உண்மை அறிக்கை கொடுக்க, கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.
அனுமதி கொடுத்தால், விவசாயம் பாதிக்கப்படும். நொய்யல் ஆற்றங்கரையில் கிணறு வெட்டி, இரண்டு போர்வெல்கள் போடப்பட்டுள்ளன. விதிமுறையை மீறி அனுமதி பெறப்பட்டு இருக்கிறது.
குடிநீர் வடிகால் வாரிய வழித்தடத்தில், 11 கி.மீ., துாரத்துக்கு குழாய் கொண்டு வரப்படுகிறது. நொய்யல் ஆற்றுக்கு அருகில் கிணறு வருகிறது. ஆற்றில் இருந்து, 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால், மின் இணைப்பு வழங்க வேண்டும்.
140 மீட்டரில் கிணறு இருக்கிறது; மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இரு இடங்களில் நொய்யல் ஆற்றின் குறுக்கே, 8 இன்ச் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆயக்கட்டு பாசனங்கள் பாதிக்கும்; 4,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைக்காது. நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

