/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுமக்களின் மனுக்களை நிராகரிக்காதீர்! அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
/
பொதுமக்களின் மனுக்களை நிராகரிக்காதீர்! அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
பொதுமக்களின் மனுக்களை நிராகரிக்காதீர்! அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
பொதுமக்களின் மனுக்களை நிராகரிக்காதீர்! அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 21, 2024 12:46 AM

கோவை:'மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் மனுக்களில் போதிய ஆவணங்கள் இணைக்கவில்லை என கூறி நிராகரித்து விடக்கூடாது; தேவையான சான்றுகளை பெற்று தீர்வு காண வேண்டும்' என, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தினார்.
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில், ஒரே கூரையின் கீழ், 15 அரசு துறைகள் சார்ந்த, 44 விதமான சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு, சிறப்பு முகாம் நடத்தி மனுக்கள் பெறப்படுகின்றன.
இம்முகாம்கள் நடத்துதல், ஏற்கனவே நடத்திய முகாம்களில் பெற்ற மனுக்கள் மீது தீர்வு காண்பது தொடர்பான ஆய்வு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஷர்மிளா, கூடுதல் கலெக்டர் ஸ்வேதா முன்னிலை வகித்தனர். அனைத்து அரசு துறைகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களை சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில், 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடத்தப்படுகிறது. 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.
கோவை மாவட்டத்தில் உள்ள, 228 ஊராட்சிகளில், 10ல் ஏற்கனவே நடத்தப்பட்டிருக்கிறது.
இதுவரை நடத்திய ஏழு முகாம்களில், 4,263 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. செப்., 14 வரை தொடர்ச்சியாக, 55 முகாம் நடைபெற உள்ளன.
மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்தி, தீர்வு காண வேண்டும். போதிய ஆவணங்கள் இணைக்கவில்லை என்று கூறி, மனுக்களை நிராகரித்து விடக்கூடாது.
மனுதாரர்களின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தேவையான சான்றுகளை பெற்று, அவர்களது கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும். அனைத்து அரசு துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில், உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கத்குமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சுரேஷ், கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.