/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காசநோய் வந்து விட்டதே என கவலை வேண்டாம்... மீண்டு வரலாம்!
/
காசநோய் வந்து விட்டதே என கவலை வேண்டாம்... மீண்டு வரலாம்!
காசநோய் வந்து விட்டதே என கவலை வேண்டாம்... மீண்டு வரலாம்!
காசநோய் வந்து விட்டதே என கவலை வேண்டாம்... மீண்டு வரலாம்!
ADDED : மார் 23, 2024 10:18 PM

''காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டால், சுலபமாக மீண்டு வந்து விடலாம்,'' என்கிறார், நுரையீரல் சிறப்பு மருத்துவர் டாக்டர் கவுதமன்.
காசநோய் யாருக்கு எல்லாம் வர வாய்ப்பு உள்ளது?
'மைக்ரோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' என்ற நுண் கிருமியால், இந்த பாதிப்பு வருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு, வர வாய்ப்புள்ளது. குறிப்பாக, கட்டுப்பாடற்ற நீரிழிவு, எச்.ஐ.வி., கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக பிரச்னையால் டயாலிசிஸ் செய்து வருபவர்களுக்கு, வர அதிக வாய்ப்புள்ளது.
நோய்க்கான அறிகுறிகள் என்ன?
இரு வாரங்களுக்கு மேல் இருமல், தொடர் சளி, மாலை நேரங்களில் காய்ச்சல், உடல் எடை திடீரென குறைதல், மூச்சு விட சிரமம் ஆகியவை அறிகுறிகள். உறுதி செய்ய 'எக்ஸ்ரே' எடுத்து பார்க்க வேண்டும்.
சளி பரிசோதனை அவசியம். இதை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மேற்கொள்ளலாம். சிகிச்சையும் அரசு மருத்துவமனைகளிலேயே வழங்கப்படுகிறது.
நோய் பாதித்தவர்கள், ஆறு மாதம் தொடர்ந்து மாத்திரை உட்கொள்ள வேண்டும். இடையில் கண்டிப்பாக நிறுத்தக்கூடாது. அவ்வாறு நிறுத்தினால், காசநோய் கிருமி பல்கி பெருகி, தொடர்ந்து, 18 முதல், 24 மாதம் வரை மாத்திரை உட்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம்.
நோய் பரவல் தடுப்பது எப்படி?
வீட்டில் ஒருவருக்கு காசநோய் வந்துவிட்டால், வீட்டில் உள்ள அனைவருக்கும் காசநோய் உள்ளதா என, சளி பரிசோதனை அவசியம் மேற்கொள்ள வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு பரவாமல் இருக்க, தற்போது தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இந்நோய் கண்டவர்கள், பொது இடங்களில் இருமும் போது, வாயை துணியால் மூடிக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அவசியம். முடிந்தவரை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது. குழந்தைகளுடன் நெருக்கமாக பழகக் கூடாது.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை உரிய நேரத்தில் வழங்கப்பட்டால், சுலபமாக இந்நோயிலிருந்து மீண்டு வந்து விடலாம்.
இன்று உலக காசநோய் தினம்!

