/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோவை மாநகராட்சிக்கு பாராட்ட மனமில்லையா?'
/
'கோவை மாநகராட்சிக்கு பாராட்ட மனமில்லையா?'
ADDED : ஆக 25, 2024 10:44 PM

கோவை:கோவை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக மாறியது வரை, பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பணி மாறுதல் பெற்று சென்றுள்ள நான்கு அலுவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா நேற்று நடந்தது.
ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பணியிட மாறுதல் பெற்ற, சுகாதார அலுவலர்கள் பரமசிவம், ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன், திருமால் ஆகியோருக்கு, 72வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ், நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
சுகாதார அலுவலர் பரமசிவம் பேசுகையில், ''பேரிடர் காலங்கள், மழை, வெயில் என எந்த காலத்திலும் பொது நலன் கருதியே பணிபுரிகிறோம்.
நான் திருப்பூர் மாநகராட்சியில் இருந்து இடமாறுதல் பெற்றவர்களை, கமிஷனர், மேயர், மாநகராட்சி ஊழியர் என அனைவரும் பாராட்டி அனுப்பிவைத்தனர். ஆனால், கோவை மாநகராட்சியில் இதுபோன்று நடக்காதது வேதனை அளிக்கிறது; மனக்குமுறல் ஏற்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் கங்காதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

