/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோஸ்த் எக்ஸெல் வாகனம் அறிமுக நிகழ்வு
/
தோஸ்த் எக்ஸெல் வாகனம் அறிமுக நிகழ்வு
ADDED : ஜூலை 13, 2024 12:46 AM

கோவை;கோவை, ஈரோடு அசோக் லேலாண்ட் டீலர் சந்தோஷ் ஆட்டோ மொபைல்ஸ் சார்பில் தோஸ்த் எக்ஸெல் வாகனம் அறிமுக விழா நேற்று சரவணம்பட்டி சந்தோஷ் ஆட்டோ மொபைல் அலுவலகத்தில் நடந்தது.
இதில், நிர்வாக இயக்குனர் ராஜேஷ்குமார் தோஸ்த் வாகனத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி அதன் புதிய அம்சங்களையும், செயல் திறன் குறித்தும் விளக்கமளித்தார்.
ஆடியை முன்னிட்டு சந்தோஷ் ஆட்டோ மொபைல்ஸ் சார்பில் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. 100 சதவீத பைனான்ஸ் வசதி, 72 மாத இ.எம்.ஐ., ஷோரூமில் டெஸ்ட் ரைடு, போன்ற சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெறலாம். சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம் ரோடு, வெள்ளக்கிணர் பிரிவு, பாப்பம்பட்டி பிரிவு, ஒண்டிபுதுார் கிளைகளிலும் இச்சலுகையை பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 9785783333 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும், என சந்தோஷ் ஆட்டோ மொபைல்ஸ் அசோசியேட் துணைத்தலைவர் அருண் தெரிவித்தார்.

