/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரட்டிப்பு பண மோசடி வழக்கு; நால்வர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
/
இரட்டிப்பு பண மோசடி வழக்கு; நால்வர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
இரட்டிப்பு பண மோசடி வழக்கு; நால்வர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
இரட்டிப்பு பண மோசடி வழக்கு; நால்வர் ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'
ADDED : பிப் 14, 2025 12:13 AM
கோவை; இரட்டிப்பு பண மோசடி வழக்கில், நான்கு பேரின் ஜாமின்மனு 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டது.
சேலம், அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் அலுவலகம் நடத்தி இரட்டிப்பு பண மோசடி நடப்பதாக புகார் வந்தது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், 100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி விஜயாபானு,48, அவரது கூட்டாளிகள் ஜெயப்பிரதா,47, பாஸ்கர்,49, சையது முகமது,44, ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடமிருந்து, 12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதான நான்கு பேரும், ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை டான்பிட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி செந்தில்குமார், நான்கு பேரின் ஜாமின் மனுவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.