/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் சிக்கனம் பேரூராட்சி வேண்டுகோள்
/
குடிநீர் சிக்கனம் பேரூராட்சி வேண்டுகோள்
ADDED : மே 03, 2024 11:03 PM

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோடை வெப்பம் தகிக்க தொடங்கியுள்ளதால், குடிநீர் ஆதாரங்கள் வேகமாக வற்ற தொடங்கியுள்ளன. கோவையின் முக்கிய நீர் ஆதாரமான பில்லுார் அணையில், 55 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
இதனால் கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், பில்லூர் குடிநீர் விநியோகம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குடிநீரை பொது குழாய்களில் திறந்து விட்டு, வீணாக்கக் கூடாது. வாகனங்களை கழுவக்கூடாது. மரம், அழகு செடி, கொடிகளுக்கு குடிநீரை பயன்படுத்தக் கூடாது என, குறிப்பிட்டுள்ளது.
கடும் வெப்பத்தால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், ஆழ்குழாய் கிணற்று நீரையும் சிக்கனமாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.