/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைக்கோடி குடியிருப்புக்கும் குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்: கலெக்டர்

ADDED : ஏப் 23, 2024 01:59 AM
கோவை:கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்களுடனான ஆலோ சனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா முன்னிலை வகித்தனர்.
அதில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
அனைத்து திட்டங்களில் இருந்தும் எடுக்கப்படும் தண்ணீர், கடைக்கோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின் மோட்டார்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் பணிகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொய்வின்றி கிடைக்க, அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
தினமும் வரையறுக்கப்பட்ட குடிநீர் நகர பகுதிகளுக்கும், ஊரக பகுதிகளுக்கும் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு குடிநீர் தேவை என்பதை அதிகாரிகள், கள ஆய்வு செய்ய வேண்டும்.
கோடை காலமாக இருப்பதால், சிக்கனமாக பயன்படுத்த மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் பேசினார்.