/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொட்டு நீர் கட்டமைப்பு மென்பொருள் வேளாண் பல்கலைக்கு பதிப்புரிமை
/
சொட்டு நீர் கட்டமைப்பு மென்பொருள் வேளாண் பல்கலைக்கு பதிப்புரிமை
சொட்டு நீர் கட்டமைப்பு மென்பொருள் வேளாண் பல்கலைக்கு பதிப்புரிமை
சொட்டு நீர் கட்டமைப்பு மென்பொருள் வேளாண் பல்கலைக்கு பதிப்புரிமை
ADDED : மே 30, 2024 07:31 PM

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை, மண்வளம் மற்றும் பாதுகாப்பு பொறியியல் துறையின் கீழ், விவசாயிகளுக்கு பெரிதும் பயன்படும் வகையில், ' சொட்டு நீர் கட்டமைப்பு' மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில், தண்ணீர் பற்றாக்குறை என்பது விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது. பயிர்களுக்கு சொட்டு நீர் பாசன வசதி ஏற்படுத்தும் போது, விவசாயிகள் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.
நிலத்துக்கு ஏற்ப சரியான அளவு தண்ணீர் பகிர்ந்து பயிருக்கு பாயும் அளவில், சொட்டு நீர் வடிவமைப்பு மென்பொருள், வேளாண் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டள்ளது. இதற்கு, டில்லியில் உள்ள மத்திய பதிப்புரிமை அலுவலகத்தில் இருந்து பதிப்புரிமை சான்று வழங்கப்பட்டுள்ளது.
மண்வளம் மற்றும் பொறியியல் துறைத்தலைவர் ரவிக்குமார் கூறுகையில், ''இது பி.எச்டி., மாணவர்களின் கண்டுபிடிப்பு என்பது பெருமையான ஒன்று. ஒரு நிலத்திற்கு சொட்டு நீர் பாசனம் எவ்வாறு அமைக்க வேண்டும்; எவ்வாறு அமைத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் பயன் கிடைக்கும் என்பதை இந்த மென்பொருள் வாயிலாக எளிதாக பொறியாளர்கள் கணக்கிட்டு வடிவமைக்கலாம். இதுகுறித்து விவசாயிகளுக்கோ, பொறியாளர்களுக்கோ விளக்கம் வேண்டுமெனில் வேளாண் பல்கலையை அணுகலாம்,'' என்றார்.
கண்டுபிடிப்பை உருவாக்கிய, மாணவி சகிமத் சுகாரா, வழிகாட்டி பேராசிரியர்களை துணைவேந்தர் கீதாலட்சுமி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.