/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மைம்' வாயிலாக போதை தடுப்பு விழிப்புணர்வு
/
'மைம்' வாயிலாக போதை தடுப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 21, 2025 11:30 PM

கோவை; கோவை மாநகர போலீஸ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'மைம்' போட்டி நேற்று கல்லுாரி அரங்கில் நடத்தப்பட்டது.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலை அறிவியல், இன்ஜி., நர்சிங் என பல கல்லுாரிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அணிகள், தங்கள் மைம் திறமையால் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்போட்டியில், கே.ஜி.ஐ.எஸ்.எல்., இன்ஜி., கல்லுாரி முதலிடம், ராமலிங்க சவுடாம்பிகை கல்லுாரி இரண்டாம் இடம், கங்கா ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி மூன்றாமிடம் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் பரிசுகளை வழங்கினர்.
போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பேசுகையில், ''போதை பழக்கத்தால், பயன்படுத்துவோர் மட்டுமின்றி, சுற்றியிருப்பவர்கள், குடும்பத்தினர் என பலர் பாதிக்கப்படுகின்றனர். வழி தவறி செல்லாமல் வாழ்க்கையில் இலக்கை அடைவதற்கு, மாணவர்கள் உழைக்க வேண்டும்,'' என்றார்.