/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடும் வெயிலால் வாழைத்தார் வரத்து சரிவு
/
கடும் வெயிலால் வாழைத்தார் வரத்து சரிவு
ADDED : மே 09, 2024 04:10 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைவாக உள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்க்கெட்டில், செவ்வாழை (கிலோ) - 50 ரூபாய், நேந்திரன் - 27, பூவன் - 30, கதளி - 20, ரஸ்தாளி - 40 மற்றும் சாம்பிராணி வகை - 30 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தை விட, செவ்வாழை மற்றும் சாம்பிராணி வகை - 5, கதளி - 8 ரூபாய் விலை சரிந்துள்ளது. ரஸ்தாலி வகை வாழை மட்டும் 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கோடை வெயில் காரணமாக, வாழை வரத்து கணிசமாக சரிந்து வருகிறது. விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. இருந்தாலும் வரத்து குறைந்து வருகிறது. வரும் நாட்களில் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது,' என்றனர்.