காட்டுப்பன்றி பிரச்னைக்கு ஒரே தீர்வு அடித்துக்கொன்று சாப்பிடுவது தான்: கேரள அமைச்சரின் 'அடடே' யோசனை
காட்டுப்பன்றி பிரச்னைக்கு ஒரே தீர்வு அடித்துக்கொன்று சாப்பிடுவது தான்: கேரள அமைச்சரின் 'அடடே' யோசனை
ADDED : அக் 12, 2025 11:13 PM

ஆலப்புழா: ''காட்டுப்பன்றிகள் வயல்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. அவற்றை கொன்று, அதன் இறைச்சியை சாப்பிட அனுமதிப்பது தான், இந்த பிரச்னைக்கான ஒரே தீர்வு,'' என்று கேரள வேளாண் அமைச்சர் பி ரசாத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன.
குறிப்பாக காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இ தனால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது. சமீபத்தில் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் அடிக்கடி நடக்கும் மோதல்களை குறைக்க, பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது.
இந்நிலையில், ஆலப்புழா மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மாநில வேளாண் அமைச்சர் பிரசாத் பேசியதாவது:
மத்திய அரசின் தற்போதைய சட்டம் காட்டுப்பன்றியின் இறைச்சி சாப்பிடுவதை தடை செய்கிறது. விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கொன்று, அதன் இறைச்சியை சாப்பிட அனுமதித்தால், பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவது பெருமளவில் குறையும். இதன் வாயிலாக பயிர்களையும் விலங்குகளிடம் இருந்து காப்பாற்றலாம்.
காட்டுப்பன்றிகள் அரியவகை இனத்தை சேர்ந்தவையல்ல. எனவே காட்டுப்பன்றிகளை கொல்வதாலும், அதன் இறைச்சியை சாப்பிடுவதாலும் அதன் இனப் பெருக்கம் குறையாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கா ட்டுப்பன்றிகளை கொல்ல வேண்டும் என்ற அமைச் சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி யுள் ளது.