/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலத்தடி நீர் மட்டம் உயர குளங்களை துார் வார கோரிக்கை
/
நிலத்தடி நீர் மட்டம் உயர குளங்களை துார் வார கோரிக்கை
நிலத்தடி நீர் மட்டம் உயர குளங்களை துார் வார கோரிக்கை
நிலத்தடி நீர் மட்டம் உயர குளங்களை துார் வார கோரிக்கை
ADDED : ஆக 27, 2024 01:29 AM
சூலுார்;சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர, சூலுார் குளங்களை தூர் வார வேண்டும், என, நீர் வள ஆதாரத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்லடத்தை சேர்ந்த தன்னார்வலர் வித்ய பிரகாஷ் நீர் வள ஆதாரத்துறை அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனு விபரம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட பருவாய், கரடிவாவி, மல்லே கவுண்டன்பாளையம், கிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, அனுப்பட்டி, கே. அய்யம்பாளையம், பனிக்கம்பட்டி, செம்மிபாளையம், கோடங்கிபாளையம், சுககம் பாளையம், ஆகிய ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வறட்சியால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் சூலுாரில் உள்ள பெரிய குளம் மற்றும் சின்ன குளத்தை தூர் வாரினால், 15 கி.மீ., சுற்றளவில் உள்ள மேலே கூறப்பட்டுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இரு குளங்களும் 200 ஏக்கர் பரப்பில் உள்ளதால், தூர் வாரும் பட்சத்தில் தற்போது, இருக்கும் நீரை விட அதிக நீரை சேமிக்க முடியும்.
இத்தனை ஆண்டுகளாக தேங்கியுள்ள கழிவுகளையும் அப்புறப்படுத்த முடியும்.
இதுகுறித்து, ஏற்கனவே முதல்வர் தனிப்பிரிவுக்கும், கோவை மாவட்ட கலெக்டருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதனால், கள ஆய்வு செய்து, குளங்களை தூர் வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.