/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் புழுதி பறக்குது: வாகன ஓட்டுநர்கள் அவதி
/
ரோட்டில் புழுதி பறக்குது: வாகன ஓட்டுநர்கள் அவதி
ADDED : மார் 05, 2025 10:18 PM
நெகமம் ; பொள்ளாச்சி, பல்லடம் ரோட்டில் கருமாபுரம் பிரிவு பகுதிகளில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி --- பல்லடம் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டில் முக்கிய இடங்கள் குறுகலாக இருப்பதால், நெடுஞ்சாலை துறை சார்பில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இதில், நெகமம் அருகே உள்ள சின்னேரிபாளையம் முதல் கருமாபுரம் பிரிவு வரை ரோடு அகலப்படுத்தும் பணிகள் மந்தமாக நடக்கிறது. இப்பகுதியில் வாகனங்களில் செல்லும் போது அதிக அளவு புழுதி பரப்பதால் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், மண் தூசு கண்ணில் படுவதால் ஓட்டுநர்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
கனரக வாகனங்கள் ரோட்டில் செல்லும் போது ஏற்படும் புழுதியால், எதிரே வரும் வாகனங்களும் சரிவர தெரிவதில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, இப்பகுதியில் ரோடு அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும், இப்பணி நிறைவு பெறும் வரை தற்காலிகமாக ரோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில், புழுதி பறக்காத வகையில் தண்ணீர் தெளிக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.