/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ- நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்
/
இ- நாம் திட்டத்தில் கொப்பரை ஏலம்
ADDED : மே 29, 2024 11:47 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் வாயிலாக கொப்பரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், இ - நாம் திட்டத்தின் வாயிலாக, 760 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் மற்றும் கொப்பரை, 48 லட்சம் மதிப்பீட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, 18 விவசாயிகள் மற்றும் 15 வியாபாரிகள் பயனடைந்துள்ளனர். விற்பனைக்கூடத்தின் வாயிலாக, 10விவசாயிகளுக்கு, 50லட்சம் பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து தனபால கிருஷ்ணன் என்ற விவசாயி கூறுகையில், ''தனியார் மார்க்கெட்டை விட, விற்பனைக்கூடத்தில் தேங்காய்க்கு, 1ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது,'' என்றார்.