ADDED : மார் 31, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்:அன்னூர் சி.எஸ். ஐ., ஆலயத்தில், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது.
இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த் தெழுந்த நாளான ஈஸ்டர் தின பண்டிகை கொண்டாட்டம் அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்து நாதர் ஆலயத்தில் நேற்று நடந்தது. பண்டிகையை முன்னிட்டு, ஆலயத்தின் வெளிப்புறம், உள்புறம், சுற்றுச்சுவர் அனைத்தும் மல்லிகை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதிகாலை 4:30 மணிக்கும், காலை 9:30 மணிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடந்தன. ஆலய ஆயர் சுவிசேஷ ரத்தினம் சிறப்பு செய்தி அளித்தார். அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. திருச்சபை செயலாளர் பிரேம் தேவா, பொருளாளர் லிவிங்ஸ்டன், நிர்வாகிகள் தினகரன், ஸ்மித், லெஷிதா, ஜூலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

