/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழக்கு குறுமைய தடகளம்; தொடர் ஓட்டத்தில் அபாரம்
/
கிழக்கு குறுமைய தடகளம்; தொடர் ஓட்டத்தில் அபாரம்
ADDED : செப் 04, 2024 11:30 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கிழக்கு குறு மைய அளவிலான மாணவர் தடகளப்போட்டி, சிறுக்களந்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
போட்டி முடிவுகள் வருமாறு: 4X100 மீ., தொடர் ஓட்டம், 14 வயது பிரிவில், எஸ்.ஆர்.என்.வி., முதலிடம், விஸ்வதீப்தி இரண்டாமிடம், வெங்கட்ராஜ் பள்ளி மூன்றாமிடம் பிடித்தன.
17 வயது பிரிவில், எல்.எம்.எச்.எஸ்.எஸ்., முதலிடம், எஸ்.ஆர்.என்.வி., இரண்டாமிடம், விஸ்வதீப்தி மூன்றாமிடம். 19 வயது பிரிவில், விஸ்வதீப்தி முதலிடம், பழனிகவுண்டர் பள்ளி இரண்டாமிடம், எஸ்.ஆர்.என்.வி., மூன்றாமிடம் பிடித்தன.
4X400 மீ., தொடர் ஓட்டம், 17 வயது பிரிவில், எல்.எம்.எச்.எஸ்.எஸ்., முதலிடம், எஸ்.ஆர்.என்.வி., இரண்டாமிடம், விஸ்வதீப்தி மூன்றாமிடம்.19 வயது பிரிவில், விஸ்வதீப்தி முதலிடம், எஸ்.ஆர்.என்.வி., இரண்டாமிடம், பழனிகவுண்டர் பள்ளி மூன்றாமிடம் பிடித்தது.
அதன்படி, தடகளத்தில், 14 வயது பிரிவில், எஸ்.ஆர்.என்.வி., சபேஷ், எஸ்.வி.எச்.எஸ்., சுதர்ஷன்; 17 வயது பிரிவில், எஸ்.ஆர்.என்.வி., தீபக்குமார்; 19 வயது பிரிவில், எஸ்.ஆர்.என்.வி., பிரசாந்த் ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று, தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றனர்.