ADDED : ஆக 01, 2026 06:54 PM
அ நிறம் | அளவு
கோவை: மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என இ.கம்யூ., சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட துணை செயலாளர் ஜேம்ஸ் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சிவசாமி பேசுகையில், ‘‘கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால், டெல்டா மாவட்டங்களில் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மத்திய அரசு மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்க கூடாது,’’ என்றார்.
மாநில பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் தங்கவேல், உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
