UPDATED : ஆக 01, 2026 07:22 PM
ADDED : ஆக 01, 2026 07:12 PM
அ நிறம் | அளவு
பீளமேடு: திருவாரூர் யாசிர் அகமது, இங்கு ஒரு கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். நண்பர்களுடன் வீடு எடுத்து தங்கியுள்ளார். மொபைல் பறிப்பு தொடர்பாக இவர் கொடுத்த புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களின் நண்பர் மருதுபாண்டி, புகாரை வாபஸ் வாங்கும்படி யாசிரை மிரட்டினார். யாசிர் மறுத்துவிட்டார். மருது பாண்டி தன் நண்பர்கள் 9 பேருடன் யாசிரையும் அவருடன் இருந்த ரோகனையும் அடித்து உதைத்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, மருதுபாண்டி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
