/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இ.கம்யூ., இளைஞரணி நிர்வாகி தற்கொலை
/
இ.கம்யூ., இளைஞரணி நிர்வாகி தற்கொலை
ADDED : ஜூலை 22, 2024 08:27 PM

பாலக்காடு;இ.கம்யூ., கட்சி இளைஞரணி மாவட்ட குழு உறுப்பினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹினா, 27. இவர், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் பாலக்காடு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராக இருந்தார். இவரது கணவர் முகமது சாதிக், வெளிநாட்டில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், நேற்று காலை இவர் வீட்டின் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை கண்ட குடும்பத்தினர், அளித்த தகவலின் பேரில் மண்ணார்க்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஷாஹினாவின் உடலை மீட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, மண்ணார்க்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'கணவர் வெளிநாட்டில் பணியாற்றும் நிலையில், ஷாஹினா வீட்டில் பண பிரச்னை இருந்துள்ளது. இதனால், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கிறோம்,' என்றனர்.

