/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேட்புமனுத்தாக்கல் பணிகளை பார்வையிட்ட தேர்தல் பார்வையாளர்
/
வேட்புமனுத்தாக்கல் பணிகளை பார்வையிட்ட தேர்தல் பார்வையாளர்
வேட்புமனுத்தாக்கல் பணிகளை பார்வையிட்ட தேர்தல் பார்வையாளர்
வேட்புமனுத்தாக்கல் பணிகளை பார்வையிட்ட தேர்தல் பார்வையாளர்
ADDED : மார் 28, 2024 05:32 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் பணிகளை, தேர்தல் பார்வையாளர் பார்வையிட்டார்.
பொள்ளாச்சி லோக்சபா தேர்தல் ஏற்பாடுகளை வருவாய்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். வேட்புமனுத்தாக்கல் கடந்த, 20ம் தேதி முதல் துவங்கி நேற்று வரை நடந்தது.
கடைசி நாளான நேற்று, பொள்ளாச்சி தேர்தல் பார்வையாளர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த அனுராக் சவுத்ரி, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம் வந்தார்.
அதன்பின், வேட்புமனுத்தாக்கல் பெறுவதற்காக செய்துள்ள ஏற்பாடுகள், பணிகள், பாதுகாப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பணிகள், விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பொள்ளாச்சி வந்த அவர், வேட்புமனுத்தாக்கல் பெறுவதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்,' என்றனர்.

